மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு - உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு - உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சென்னை உயர்நீதிமன்றம்.
  • Share this:
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இதனை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து, அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன . ஏற்கனவே, இதுதொடர்பாக பாமக, மதிமுக, தி.க உள்ளிட்டவை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன . 

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் ஆஜராகி இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கும்படி முறையிட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இன்று காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.

மேலும் படிக்க...சீனாவின் பீஜிங் மார்க்கெட்டில் பரவும் கொரோனா - இரண்டாவது அலையா...?

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவி - 7 பஸ்களை இலவசமாக இயக்கும் தனியார் பஸ் நிறுவனம்
First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading