அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி முதலிடம்: 20-வது இடத்தைப் பிடித்தது அண்ணா பல்கலைக்கழகம்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்துள்ளது.

அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி முதலிடம்: 20-வது இடத்தைப் பிடித்தது அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை ஐஐடி (கோப்புப்படம்)
  • Share this:
தேசிய தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் நாட்டில் உள்ள  உயர்கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடும். அந்த வகையில், இந்த ஆண்டும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பொறியியல், மருத்துவ உயர்கல்வி நிறுவனங்கள் உட்பட தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது.

தேசிய தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி தொடர்ந்து 2வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் IISc பெங்களூர், 3வது இடத்தில் IIT டெல்லி உள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசையிலும் சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்துள்ளது.


இதேபோல், பல்கலைக்கழகங்களில் IISc பெங்களூருக்கு முதலிடம். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு இரண்டாவது இடம். உ.பி.யில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

Also see:
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்தமாக அகில இந்திய அளவில் 20-வது இடத்திற்கு சரிந்துள்ளது. பல்கலைக்கழகப் பிரிவில் 12வது இடத்திற்கும், பொறியியல் கல்லூரி தரவரிசையில் 14வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் முறையே 8-வது மற்றும் 9-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேசிய அளவிலான கல்லூரிகளின் தரவரிசையில் சென்னை மாநிலக் கல்லூரி நாட்டில் 5 வது இடம் பிடித்துள்ளது.

First published: June 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading