நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது : தேசிய தேர்வு முகமை

கொரோனா தாக்கம் காரணமாக தற்போதைய சூழலில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து, இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது : தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வு (கோப்புப் படம்)
  • Share this:
கொரோனா தாக்கம் காரணமாக தற்போதைய சூழலில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து, இன்று அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வுகள் குறித்து உடனடியாக அறிவிப்பு வெளியிட பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை கருத்தில் கொண்டு தற்போதைய சூழலில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் நடத்துவது சாத்தியமா என்பது தொடர்பாக ஆராய, தேசிய தேர்வு முகமை மற்றும் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க...

குற்றவாளியைப் பிடிக்க சென்ற இடத்தில் ரவுடிகள் துப்பாக்கிச்சூடு - 8 போலீசார் உயிரிழப்பு

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இக்குழு தனது அறிக்கையை இன்று சமர்ப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அறிக்கை தாக்கல் செய்த தேசிய முகமை தேர்வு குழு நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading