பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

கொரோனா ஊரடங்கால் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் குறைவான பாடங்களுடன் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் முடிவு
அண்ணா பல்கலைக்கழகம்.
  • Share this:
கொரோனா ஊரடங்கால் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் குறைவான பாடங்களுடன் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொறியியல் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கால் கல்லூரிகள் மூடப்பட்டதால் குறைந்த பாடத்திட்டத்துடன் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி, அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி மற்றும் பி.ஆர்க் எனப்படும் ஆர்க்கிடெக்சர் அன்ட் பிளானிங் ஆகிய நான்கு கல்லூரிகளில் 5 பாடப்பிரிவுகளுக்கு பதில், நடத்தி முடிக்கப்பட்ட 4-ல் இருந்து கேள்விகள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அடுத்தகட்டமாக அனைத்து இணைப்பு மற்றும் உறுப்பு கல்லூரிகளில் பாடத்திட்ட குறைப்புடன் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரியர் எழுதுபவர்களுக்கு பாடத்திட்ட குறைப்பு பொருந்தாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Also read... பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம்... பிரதமர் மோடி!Also see...
First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading