கல்லூரிகளில் ஏசி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு... பல்வேறு விதிமுறைகளை வகுத்தது அண்ணா பல்கலைக்கழகம்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களை மறு உத்தரவு வரும் வரை பணிக்கு அழைக்கக்கூடாது

கல்லூரிகளில் ஏசி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு... பல்வேறு விதிமுறைகளை வகுத்தது அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்.
  • Share this:
கொரோனா நோய் பரவல் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு நிலையான இயக்க விதிமுறைகளை வகுத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு நடத்த வேண்டிய  பாடங்களுக்கான தயாரிப்புகளை மின்னனு முறையில் பேராசிரியர்கள் முன்னெடுக்க வேண்டும்.
அதன்படி பெரும்பாலும் e-content என்று சொல்லப்படக்கூடிய மின்னஞ்சல் வாட்ஸ்அப் ஆகியவற்றில் மாணவர்களுக்கான பாடக்குறிப்புகள் விளக்கங்கள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும். வகுப்பில் பேராசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.


மேலும், கல்லூரிகளில் உள்ளே வரவும் ,வெளியே செல்லவும் என  இரண்டு  வாயில்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கல்லூரிக்குள் வரும் ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு நுழைவு வாயிலில்  தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

உணவு இடைவெளி ஒரே நேரத்தில் இல்லாமல் மாணவர்கள் ஒன்று கூடலை தவிர்க்கும் வகையில்   உணவு இடைவெளிக்கான நேரம் பிரித்து அளிக்கப்பட வேண்டும்.

கல்லூரியில் பணியாற்றும் பேராசியர்கள்,மாணவர்கள்,ஊழியர்கள் அனைவரும் தினந்தோறும் தங்கள் உடல்நலன் குறித்த விவரங்களை படிவத்தில் பதிவு செய்து வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கும் ஊழியர்களை பணிக்கு அழைக்ககூடாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களை மறு உத்தரவு வரும் வரை பணிக்கு அழைக்கக்கூடாது

தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பில் மாணவர்கள் அமரவைக்கப்பட வேண்டும். கல்லூரி பேருந்துகளில் இரண்டு நபர்கள் ஒரே இருக்கையில் அமரக்கூடாது

ஏசிக்கள் இயக்கப்படுகின்ற போது அந்த அறையின் ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் fan mode-இல் மட்டுமே ஏசிக்களை  இயக்க வேண்டும்.

கல்லூரி வளாகம்,,வகுப்பறைகள் உள்ளிட்ட இடங்கள்  தினசரி கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வகுத்துள்ளது.


Also see...
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading