மருத்துவ படிப்பு: ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடம் ஒதுக்கக் கோரி தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மருத்துவ படிப்பு: ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
உச்ச நீதிமன்றம்
  • Share this:
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடம் ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

ஒவ்வொரு கல்வியாண்டும் மாநிலங்களில் உள்ள மருத்துவ இடங்களில் 15 விழுக்காடும், மருத்துவ மேற்படிப்பில் 50 விழுக்காடு இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதில், கடந்த சில ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக அமல்படுத்தாததால் பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.


இதையடுத்து, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடம் ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

இதேகோரிக்கையை முன்வைத்து அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தொடரப்பட்ட மனுக்களும், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பாமக சார்பில் தொடரப்பட்ட மனுக்களும் இன்று விசாரணைக்கு வருகிறது.

மேலும் படிக்க...மது குடிப்பதற்காக ஆட்டுக்குட்டியைத் திருடிய இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்...

First published: June 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading