ஆம்புலன்ஸுக்காக 3 மணி நேரம் நடுரோட்டில் காத்திருந்த கொரோனா நோயாளி மூச்சுத் திணறி உயிரிழப்பு

ஆம்புலன்ஸுக்காக 3 மணி நேரம் நடுரோட்டில் காத்திருந்த கொரோனா நோயாளி மூச்சுத் திணறி உயிரிழப்பு
நடு ரோட்டில் கொரோனாவால் உயிரிழந்த முதியவர்
  • Share this:
பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் ஆம்புலன்ஸ் உரிய நேரத்திற்கு வராததால் சாலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஹனுமந்தா நகரில் 65- வயது முதியவர் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் பரிசோதனையில் பாஸிட்டிவ் என வர அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்றால் பக்கத்துக்கு வீட்டுகாரர்கள் பீதி அடையக்கூடும் என்பதால் தெரு முனைக்கு ஆம்புலன்ஸை வர கூறியுள்ளார். 4 மணி அளவில் ஆம்புலன்ஸ் வந்து விடும் என கூறியும் 7 மணியாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. 3 மணி நேர தாமதத்திற்கு பின்னர் ஆம்புலன்ஸ் வந்துள்ளது.


எனினும் அதற்குள் முதியவர், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சாலையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொரோனா பிறருக்கும் பரவும் என்ற அச்சத்தால் முதியவர் அருகில் எவரும் செல்லாமல் கீழே அவரது உடல் கிடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆங்கில ஊடகங்களுக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ஆர்.அசோகா, நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது கால தாமதம் ஆக கூடாது என கூறியுள்ளார்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading