தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பா?

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக இருந்து வருவதால், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் , தமிழ்நாடு அரசின் ஆலோசகர் சண்முகம்,மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்

அப்போது, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே தமிழகத்தில் மே 5ம் தேதி முதல் 31 ம் தேதி வரை 12ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரொனா 2ம் அலை அதகரித்து வருவதாலும், மத்திய அரசின் தேர்வுகள் ஒத்தி வைத்து இருப்பதால், தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

12 ம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே செய்முறைத் தேர்வுகள் முடிந்தப்பின்னர் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும், மாணவர்கள் பொதுத் தேர்விற்கு தயாராவதற்கு ஏற்ப விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி முதல்கட்ட செய்முறைத் தேர்வு முடித்த மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. மேலும் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
Published by:Sheik Hanifah
First published:
மேலும் காண்க