லட்சம் பேரில் ஒருவர் மட்டுமே மரணம்...! உலகிலேயே இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக் குறைவு

உலகத்திலேயே கொரோவால் இறப்பவர்களின் விகிதம் இந்தியாவில் தான் மிகக் குறைவு என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

லட்சம் பேரில் ஒருவர் மட்டுமே மரணம்...! உலகிலேயே இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக் குறைவு
கோப்புப்படம்
  • Share this:
உலகளவில் பெருந்தொற்றாக மாறியுள்ள கொரோனாவின் தாக்கத்தால் நேற்று வரை 4,65,740 பேர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் நேற்றைய கொரோனா தொற்று நிலவர அறிக்கையின்படி இந்தியாவில் இறப்பு விகிதமானது லட்சம் பேரில் 1 ஆக உள்ளது.

இந்த இறப்பு விகதமானது உலகளவில் 6.04 ஆகவும், இங்கிலாந்தில் 63.13, ஸ்பெயினில் 60.60, இத்தாலியில் 57.19, அமெரிக்காவில் .36.30, ஜெர்மனியில் 27.32, பிரேசிலில் 23.68, கனடாவில் 22.48, ஈரானில் 11.53, ரஷ்யாவில் 5.62 ஆகவும் உள்ளது.இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களில் 56.39 சதவிகித நபர்கள் குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு விகிதம்


Also read... டெக்சாமிதோசோன் மருந்தை யாருக்கு அளிக்கலாம்? WHO நிர்வாக இயக்குநர் விளக்கம்!இதுவரை 2,48,189 பேரும், கடந்த 24 மணி நேரத்தில் 10,994 பேரும் குணமடைந்துள்ளனர். தற்சமயம் 1,78,014 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading