ஆசிரியர்கள் பேட்டி அளிக்கக்கூடாது: ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு..

அரசின் கொள்கை முடிவுகள் சார்ந்து ஆசிரியர்கள் யாரும் ஊடகங்களிடம் தன்னுடைய அனுமதியின்றி பேட்டி அளிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் பேட்டி அளிக்கக்கூடாது: ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு..
கோப்புப் படம்
  • Share this:
ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அரசின் கொள்கை முடிவுகள் சார்ந்து ஆசிரியர்கள் யாரும் ஊடகங்களிடம் தன்னுடைய அனுமதியின்றி பேட்டி அளிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு ஆசிரியர்கள் பேட்டி அளிப்பது அரசுப் பணியாளரின் விதிமுறை மீறிய செயலாகும் என்றும் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுக்கு உத்தரவு குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை சார்ந்த எந்தவொரு அதிகாரிகளும்  பெரும்பாலும் பேட்டிகள் கொடுப்பதில்லை. அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பிரச்னைகள் தொடர்பாக ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்களே பேட்டிகள் அளிக்க முன் வருகின்றனர்.அதன்மூலம்  தங்களுடைய கருத்துக்களை ஊடகங்கள் மூலமாக  அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்  உத்தரவு ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன.

மேலும் படிக்க...எந்த ரத்த வகையினருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்? ஆய்வுகள் சொல்வது என்ன?

  
First published: June 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading