கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கினர்.
இந்த நிலையில், அர்ப்பணிப்பு உணர்வோடு ஓய்வில்லாமல் உழைத்து வரும் காவலர்களுக்கு அவர்கள் வழங்கிய நிதியை திருப்பி வழங்க வேண்டுமென்று டிஜிபி திரிபாதி அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்படி காவலர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு நாள் ஊதியமான 8 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 286 ரூபாய் மீண்டும் அவர்களுக்கே வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.