தமிழகத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டிய இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 10,723 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 42 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இன்று 1,10,130 பேருக்கு பரிசோதனை செய்ததில் 10,723 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 42 பேர் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 3,304 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,91,451 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 13,113 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,925 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 9,07,947 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 70,391 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் 18 நாட்களில் 1 லட்சம் பேருக்கு பாதிப்பு

தமிழ்நாட்டில் 18 நாட்களில் ஒரு லட்சத்து ஓராயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி ஒன்று (1,01,961) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1- ம் தேதி வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 89 ஆயிரத்து 490 ஆக இருந்தது.

ஏப்ரல் 1ம் தேதி ஒரே நாளில் 2817 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை பத்து நாட்களில் 37 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 10 ம் தேதி ஒரே நாளில் 5989 பேருக்கு தொற்று உறுதியானது.

அதன் பிறகு ஒவ்வொரு நாளும் 6 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யும் நிலை உருவானது. ஏப்ரல் 14ம் தேதி ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் 16ம் தேதி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் 17ம் தேதி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் தொற்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டது.

ஏப்ரல் 17ம் தேதி வரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 80 ஆயிரத்து 728 ஆகும். இன்று ஏப்ரல் 18-ம் தேதி 10,723 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தற்போது மருத்துவமனையில் 70,391 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக 9,07,947 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 13,113 ஆக உயர்ந்துள்ளது.

 

 
Published by:Sheik Hanifah
First published:
மேலும் காண்க