இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் - எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் என்னென்ன?

RBI Governor Press Conference | "நிதியமைச்சரின் பொருளாதார அறிவிப்புகளுக்கு அடுத்து முதன் முறையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்கிறார்”

இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் - எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் என்னென்ன?
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
  • News18
  • Last Updated: May 22, 2020, 8:46 AM IST
  • Share this:
பொருளாதாரத்தை மீட்க 5 கட்டமாக நிதியமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர், இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

கொரோனாவால் வீழ்ந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ₹ 20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து, 5 கட்டமாக பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார்.

பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.


நிதியமைச்சரின் அறிவிப்புகளுக்கு அடுத்து முதன் முறையாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த உள்ளார். இதற்கு முன்னர் 2 முறை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் என்னென்ன?

ஏற்கனவே, வங்கிக்கடன் தவணைகளை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டதுபோல, மீண்டும் கால அவகாசம் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்துறை பிரிவுகளுக்கு கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading