விதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை; அலட்சியம் வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி

அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் வியயராஜே உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

PM Modi | ஊரடங்கு தளர்த்தப்படும் போதும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள பிரதமர் மோடி, நவம்பர் மாதம் வரை அனைவருக்கும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி 6வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஊரடங்கு தளர்வின் இரண்டாம் கட்டத்திற்குள் நாம் நுழையும் கட்டத்தில், நாட்டு மக்கள் தங்கள் நலன் குறித்து அக்கறையோடு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.

  உலகின் பிற நாடுகளில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளோடு ஒப்பிடும் போது, இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அவர் கூறினார். உரிய நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் நல்ல பலனை கொடுத்துள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார். கட்டுப்பாட்டு மண்டலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற பிரதமர். விதிகளை யாரேனும் மீறினால் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

  மக்களின் அலட்சியம் வருத்தமளிப்பதாகவும், விதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.

  ஊரடங்கு காலத்தில் ஒருவர் கூட பசியோடு உறங்கச் செல்லக்கூடாது என்பதற்காக அரசும், பொதுச்சமூகமும் இணைந்து செயல்பட்டதாகத் தெரிவித்தார். பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டம் அறிவிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
  படிக்க: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

  படிக்க: இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை
  கடந்த 3 மாதங்களில் 20 கோடி ஏழைக்குடும்பங்களின் வங்கிக்கணக்குகளில் 31 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் 18 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

  இதுவரை 80 கோடி பேருக்கு கடந்த 3 மாதங்களாக ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், இலவச ரேசன் பொருட்களை பெற்றவர்கள் எண்ணிக்கை, ஐரோப்பிய யூனியனின் மக்கள் தொகையை விட இருமடங்கு அதிகம் என்றும், அமெரிக்க மக்கள்தொகையை விட இரண்டரை மடங்கு அதிகம் என்றும் தெரிவித்தார்.

  நவம்பர் மாத இறுதிவரை ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்த பிரதமர், <Next> இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதன்மூலம் ஒவ்வொருவரும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் கடலை இலவசமாக பெறுவார்கள் என்றும் அவர் கூறினார். ஏழைகளுக்கு அரசால் உணவளிக்க முடிகிறது என்றால் அதற்கு விவசாயிகளும், வரிசெலுத்துவோருமே காரணம் என்றும், அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் கூறினார்.
  Published by:Sankar
  First published: