கொரோனா நம்மை தாக்கினால் காது-மூக்கு-தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்ட பிறகும் 40 சதவீதம் அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்ட பிறகும் 40 சதவீதம் அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

  • Share this:
கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையால் நாட்டில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு பக்கம் வேலையிழப்பு, ஒரு பக்கம் உயிரிழப்பு என மக்களை உருக்குலைய வைத்தது கொரோனா. தற்போது இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துவரும் சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அதனால் காது, மூக்கு, தொண்டையில் பாதிப்பு ஏற்படுமா? பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில் அதிலிருந்து மீள்வது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

கொரோனா தொற்று ஏற்பட்டால், அதன் மூலம் நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் உருவாகிறது. இதனால், சில நேரங்களில் மரணமே ஏற்படும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால், காது, மூக்கு, தொண்டையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கொரோனா தாக்கத்தால் மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, வாசனை தெரிவதில் பிரச்சனை போன்றவை முக்கிய பாதிப்புகள் எனக் கூறும் மருத்துவர்கள், கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்ட பிறகும் 40 சதவீதம் அளவுக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்கின்றனர். இருப்பினும், அது நாளடைவில் சரியாகி விடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா தொற்று தாக்கும்பட்சத்தில் தொண்டையில் புண், எரிச்சல், அடைப்பு, டான்சில்ஸ் எனப்படும் தொண்டை சதை வீக்கம் போன்றவையும் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், தலைவலி, தொண்டை வறட்சி, உடல் சோர்வு ஆகியவையும் குறிப்பிடத்தக்க பிரச்சனைகள் எனக் கூறுகின்றனர். இதை தவிர நாக்கில் சுவை உணர்வில் பாதிப்பு மற்றும் நுகர்தலில் பிரச்சனை ஏற்படுவதோடு, சில நோயாளிகளுக்கு காது கேளாமை, காது மற்றும் மூளை நரம்புகள் பாதிப்புகளும் ஏற்படுவதாக எச்சரிக்கின்றனர். எனவே, கொரோனா பரவுவதைத் தடுக்க, தொடர்ந்து முகக்கவசத்தை மக்கள் பயன்படுத்துவதோடு, கிருமி நாசினிகள் மூலம் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Published by:Archana R
First published: