கொரோனாவால் இறந்தால் மத்திய அரசிடம் தெரிவிக்கவும் - டெல்லி அரசுக்கு அமித் ஷா உத்தரவு

தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களை தனிமை முகாம்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

கொரோனாவால் இறந்தால் மத்திய அரசிடம் தெரிவிக்கவும் - டெல்லி அரசுக்கு அமித் ஷா உத்தரவு
உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • Share this:
டெல்லியில் கொரோனாவால் நிகழும் ஒவ்வொரு உயிரிழப்பையும் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் அமித் ஷா வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது, தொற்றாளர்களின் தொடர்புகளை விரைவாக கண்டறிய வேண்டும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்டறிவதில் புதிய வரைமுறைகளை கையாள்வது, தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் மருத்துவ கட்டமைப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர் வீட்டு தனிமைப்படுத்தலின்போது இறந்தாரா அல்லது மருத்துவமனையில் உரிய நேரத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாரா என்பதை கண்டறிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also read... லடாக் நிலவரம் தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனைமேலும், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களை தனிமை முகாம்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading