கர்நாடகாவில் ஒரே குழியில் மொத்தமாக வீசப்படும் கொரோனா சடலங்கள் - பகீர் வீடியோ

வீடியோ காட்சிகள்

கர்நாடக மாநிலம் பல்லாரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் தூக்கி வீசி புதைக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆனால், இதை எதையும் கவனத்தில் கொள்ளாமல், கர்நாடக மாநிலம் பல்லாரியில் கொரோனாவால் உயிரிழந்த பலரின் உடல்களை ஒரே குழியில் சுகாதாரத்துறையினர் வீசுகின்றனர்.

  இதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார், கொரோனா பிரச்னையை அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதை இந்த வீடியோ பிரதிபலிப்பதாக விமர்சித்துள்ளார்.  மேலும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி இதுபோல் நடைபெறக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

   
  Published by:Sankar
  First published: