இங்கிலாந்தில் முதல் முறையாக பூனைக்கு கொரோனா தொற்று உறுதி

இங்கிலாந்தில் முதல் முறையாக பூனைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் முதல் முறையாக பூனைக்கு கொரோனா தொற்று உறுதி
கோப்பு படம்
  • Share this:
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் பெரும்பாலும் விலங்குகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுவது அரிதான ஒன்றாகவே இருந்து வந்தது.

ஏற்கனவே அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ப்ரான்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் உள்ள 4 வயதான நாடியா என்றழைக்கப்படும் பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு தேசிய கால்நடை சேவை ஆய்வகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

அந்த புலியிடம் இருந்து மேலும் 4 புலிகளுக்கும், மூன்று ஆப்ரிக்க நாட்டு சிங்கங்களுக்கும் கொரோனா பரவியுள்ளது என்று அந்நாட்டு தேசிய கால்நடை சேவை ஆய்வகம் அதிகாரப்பூர்வமாக கூறியிருந்தது.


Also Read :  இணையத்தை கலக்கும் அசுரன் தனுஷின் வெறித்தனமான புகைப்படங்கள்

இதற்கிடையே, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட உரிமையாளரிடம் இருந்து ஒரு பூனைக்கு கொரோனா பரவி இருப்பதாக கால்நடை ஆய்வக சோதனையில் தெரியவந்தது.

இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் முதல் முறையாக பூனைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கையில், பூனைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் விலங்குகளிடம் இருந்து மனிதர்க்கு பரவுகிறது என அர்த்தம் இல்லை.Also read :  தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்கள்

மனிதர்களிடம் இருந்து தான் விலங்குகளுக்கு சென்றுள்ளது. பூனையின் உரிமையாளர் கொரோனவால் பாதிப்படைந்துள்ளார். அதனால் பூனைக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading