உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா- இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளில் மட்டும் 52 % பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 21 லட்சத்தை கடந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் பிரேசிலில் தொற்று பரவலும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா- இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளில் மட்டும் 52 % பாதிப்பு
கோப்புப்படம்
  • Share this:
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 21 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உலகின் மொத்த பாதிப்பில் 52 விழுக்காடு அளவிலான பாதிப்புகள் அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய 4 நாடுகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.

உலகில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில், 31 லட்சத்திற்கு அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் சுமார் 62,000 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக அமெரிக்காவில் தினந்தோறும் 40,000-க்கும் மேலான பாதிப்புகள் கண்டறியப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

நியூயார்க், கலிபோர்னியா, டெக்ஸாஸ் மற்றும் ஃப்ளோரிடா ஆகிய 4 மாகாணங்களில் மட்டுமே இதுவரை சுமார் 12 லட்சம் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் கடந்த இருநாட்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.


அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசிலில் பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சமாக அதிகரித்துள்ளது. பிரேசிலில் ஜூலை 7ஆம் தேதி 48,000 பேருக்கும், ஜூலை 8ஆம் தேதி 41,000 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பிரேசிலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆயிரத்தை கடந்துள்ளது.

Also see:
 

அமெரிக்கா மற்றும் பிரேசிலில் மட்டும் இதுவரை கொரோனாவால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள மொத்த உயிரிழப்பில் 36.75 விழுக்காடாகும்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 6,562 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கையில் 4வது இடத்தில் இருந்தாலும், உயிரிழப்போர் எண்ணிக்கையில் ரஷ்யா 10வது இடத்திலேயே உள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 45 லட்சம் பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading