CORONAVIRUS VACCINE INDIA COVAXIN ZYCOV D MOVE TO PHASE II CLINICAL TRIALS SKV
கோவாக்சின் தடுப்பூசி 2-ம் கட்ட சோதனைக்கு தயார் - செப்டம்பர் முதல் வாரத்தில் பரிசோதனை
இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி முற்கட்ட சோதனையில் எத்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத மருந்து என்று சோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
கொரோனாவிற்கு எதிராக இந்தியா தயாரித்துள்ள கோவாக்சின் என்னும் தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சி கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது.
இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் சென்னை காட்டங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தி 14 நாட்கள் ஆன நிலையில், இது தொடர்பாக எஸ்.ஆர்.எம் மருத்துவகல்லூரி முதல்வர் கூறுகையில், தற்போது முதல் கட்ட பரிசோதனையில் இந்த மருந்தை எடுத்துக்கொண்டவர்களுக்கு எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்பட வில்லை என்பது தெரியவந்துள்ளது தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் நலமுடன் உள்ளதால் இரண்டாம் கட்ட சோதனைக்கு செல்ல தயாராக உள்ளது கோவாக்சின் மருந்து .
முதல் கட்டத்தில் 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்கள் உடலில் கோவாக்சின் செலுத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டத்தில் வயது வரம்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு 12 வயதுடைய இளம் பருவத்தினர் முதல் 65 வயது முதியவர்கள் வரை ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் துவங்கவுள்ள இரண்டாம் கட்ட ஆய்வில் சுமார் 150 நபர்களை தமிழகத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள மனித உடல் சோதனையில் மூன்றாவது கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் கொண்டு சோதனை செய்யப்பட்டு பிறகு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது” என்று கூறியுள்ளார்.