கொரோனா தொற்று இருப்பவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் அதிகம் - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தொற்று இருப்பவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் அதிகம் - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா (கோப்புப் படம்)

சிகிச்சையில் இருப்பவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் அதிகம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  கொரோனா தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் அதிகம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  28.06.2020 நிலவரப்படி, மதியம் 2 மணியளவில், 16,095 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கிறது சுகாதார அமைச்சகத்தின் வலைதளமான MoHFW. 309712 பேர் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்திருப்பதாகவும், 203051 பேர் பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவைப் பொறுத்தவரை, கொரோனா வைரஸ் குணமடைதல் விகிதம், 58.56 சதவிகிதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Gunavathy
  First published: