கொரோனா கடைசியானது அல்ல; அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டியிருக்கலாம் - WHO மூத்த விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன்

"மற்ற நோய்களில் இருந்து நாம் தப்பவில்லை. குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகள் தவறியிருக்கின்றன. அதனால் அடுத்த ஒரு ஆபத்துக்கு தயாராக இருக்க வேண்டி இருக்கலாம்” என்னும் எச்சரிக்கையை விடுத்துள்ளார் செளம்யா சுவாமிநாதன்.

கொரோனா கடைசியானது அல்ல; அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டியிருக்கலாம் - WHO மூத்த விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன்
செளமியா சுவாமிநாதன்
  • Share this:
2021-இல் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி  பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானிகளுள் ஒருவரான செளமியா சுவாமிநாதன், News 18 -க்கு அளித்துள்ள பேட்டியில், “மற்ற நோய்களில் இருந்து நாம் தப்பவில்லை. குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகள் தவறியிருக்கின்றன. அதனால் அடுத்த ஒரு ஆபத்துக்கு தயாராக இருக்க வேண்டி இருக்கலாம்” என்னும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

80 சதவிகித நாடுகளில் குழந்தைகளுக்கு அளிக்கவேண்டிய தடுப்பூசிகளில் தடைகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா தடுப்பில் அரசுகள் செலுத்தும் தீவிரத்தன்மை எவ்வளவு முக்கியமானதோ அதே அளவிலான கவனத்தை லாக்டவுன் காலம் முடிந்ததும், பொது சுகாதாரத்திலும், குழந்தைகளுக்கான நோய் தடுப்பிலும், இயல்பான பொது சுகாதார சேவைகளிலும் தீவிரப்படுத்துவது அவசியமானது என்று தெரிவித்திருக்கிறார்கள்.கொரோனா தொற்று காரணமாக இறப்பவர்கள் மட்டுமல்ல. மற்ற நோய்களாலும் உயிரிழப்புகளை நாம் தடுத்தாக வேண்டும். இதனால் மற்ற நோய்களுக்கான சிகிச்சை முறைகளை அலட்சியப்படுத்துதல் கூடாது. இதயநாள நோய்கள், காசநோய்கள், ஸ்ட்ரோக்குகள் போன்ற பயங்கரமான நோய்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் மக்கள் அவதியுறக்கூடாது.


மேலும் பார்க்கவும்:- 

கொரோனா நோய்த்தொற்று நமக்கு முன்பாக ஒரு ஹிமாலய சவாலை வைத்துள்ளது. சவாலைப் போலவே ஒரு வாய்ப்பையும் வைத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொது சுகாதாரத்தைக் கட்டமைக்கும் வேலையை அரசுகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். பொது சுகாதாரம்தான் இன்னும் வரவிருக்கும் தொற்று நோய்களில் இருந்தும் நம்மைக் காக்கும். கொரோனா கடைசியான பெருந்தொற்று அல்ல. இன்னும் தொற்று நோய்களை நாம் எதிர்கொள்ள நேரிடலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading