இந்தியாவில் தடுப்பூசிகளை செலுத்துவதை அதிகரிக்கும் நோக்கில், 14 ஆயிரத்து 505 கோடி ரூபாய் மதிப்பில், 66 கோடி தடுப்பூசிகளை கூடுதலாக வாங்க, மத்திய அரசு ஆர்டர் செய்ய முடிவு செய்துள்ளது.
கோவேக்சின், மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் பரவலாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 39 கோடியே 49 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், தடுப்பூசிகளை செலுத்துவதை அதிகரிக்கும் நோக்கில், 14 ஆயிரத்து 505 கோடி ரூபாய் மதிப்பில், 66 கோடி தடுப்பூசிகளை கூடுதலாக வாங்க, மத்திய அரசு ஆர்டர் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தகவலை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியா மேற்கொண்டதிலேயே இதுவே மிகப்பெரிய தடுப்பூசி ஒப்பந்தமாகும்.
ஆகஸ்ட் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் 135 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 66 கோடி டோஸ் தடுப்பூசி மட்டுமல்லாமல், மேலும் 30 கோடி டோஸ்
தடுப்பூசிகள் தயாரிக்க ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிகல் -இ (biological-E) நிறுவனத்திற்கு மத்திய அரசு முன்பணமும் செலுத்தியுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் 96 கோடி
தடுப்பூசிகள் மத்திய அரசின் வசம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில்
கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. நேற்று 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று நேற்றைய கொரோனா பாதிப்பை விட சற்று குறைந்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 949 பேர்
கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 10 லட்சத்து 26 ஆயிரத்து 829 ஆக உள்ளது.
Must Read : ஆடி மாதம் வருது.. கோவில்களில் திருவிழா நடத்த அனுமதிக்கப்படுமா...?
கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 542 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,12,531 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.32 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 40,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 876 ஆக உயர்வடைந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.29 சதவீதமாக உள்ளது.
Read More : சென்னையில் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கை : சோதனைகளை கடுமையாக்க மாநகராட்சி முடிவு
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் தற்போது வரை 4,30,422 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.38 சதவீதமாக உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39 கோடியே 53 லட்சத்து 53 ஆயிரத்து 767 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.