கொரோனா உறுதியான பின்னர் முகக் கவசத்தை கழற்றி அதிர வைத்த பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா உறுதியான பின்னர் முகக் கவசத்தை கழற்றி அதிர வைத்த பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர்
  • News18
  • Last Updated: July 8, 2020, 1:18 PM IST
  • Share this:
கடந்த திங்களன்று போல்சோனாரோவுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா என்பது காய்ச்சலைப் போன்றது தான் என்று கூறி வந்த போல்சொனாரோ அதற்காக ஊரடங்கை அமல்படுத்துவது பொருளாதாரத்தை முடக்கும் என கருத்து தெரிவித்து வந்தார். முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்குச் செல்வது, ஆதரவாளர்களுடன் கைகுலுக்குவது என கொரோனா கட்டுப்பாடுகள் எதையும் கடைப்பிடிக்காத போல்சொனாரோ, தான் ஒரு தடகள வீரர் என்பதால் தன்னை வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறிவந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா உறுதியான நிலையில், பேட்டியளித்த அவர், தான் நலமாக உள்ளதாக கூறி திடீரென மாஸ்கை கழற்றி எதிரே இருந்த செய்தியாளர்களை அதிர வைத்தார்.
படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்

படிக்க: குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்
இதனிடையே ஜெய்ர் போல்சொனாரோ கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய உலக சுகாதார நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

 
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading