சென்னை அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு நீட்டிப்பு எதுவரை?

சென்னை அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு நீட்டிப்பு எதுவரை?

கோப்புப் படம்

சென்னை, அதன் சுற்று பகுதி அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்குவது ஜூலை 5 வரை  நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். 

 • Share this:
  சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களின் சில பகுதிகளிலும் உள்ள அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்குவதை மேலும் நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

  இப்பகுதிகளில், கடந்த 19 முதல் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஜூன் 30 வரை விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டது. இது, தற்போது வருகின்ற 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

  மேலும் படிக்க...

  சுவர் ஏறிக்குதித்து ஓடிய காவலர்... அசராத பெண் காவலர்...! சாத்தான்குளம் காவல் நிலையத்தில் என்னதான் நடந்தது?

  மேலும், சென்னையில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு சமைத்து, தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று விலையில்லாமல் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
  Published by:Vaijayanthi S
  First published: