புதுச்சேரியில் 52 பேருக்கு கொரோனா: சில கடுமையான முடிவுகள் எடுக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரியில் கடை வைத்திருப்போரும் வியாபாரிகளும் பொதுமக்கள் நலன் கருதி கடைகளை மூட முன்வரவேண்டும் என நாராயணசாமி கேட்டுக்கொண்டார். குறிப்பாக கடலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து வருபவர்கள் புதுச்சேரிக்கு வருவதைத் தவிர்க்குமாறு கோரினார்.

புதுச்சேரியில் 52 பேருக்கு கொரோனா: சில கடுமையான முடிவுகள் எடுக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி பேச்சு
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
  • Share this:
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புதுச்சேரியில் தற்போது கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு 52 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக முகக்கவசம் தயாரிக்கக்கூடிய நிறுவனத்தில் இருந்தும், சென்னையிலிருந்து திரும்பிய ஒரு குடும்பத்தினரிடம் இருந்தும் பல பேருக்கு தொற்று பரவியுள்ளது.

புதுவையில் தற்சமயம் எல்லைகள் மூடப்பட்டு, பொதுமக்கள் வருவதற்கு கடுமையாக்கப்பட்டு, காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை சோதனை செய்து வருகின்றனர். ஏனெனில், தற்போது நோய்த் தொற்றால் பாதித்து சிகிச்சை பெற்றுச் குணமடைந்து செல்வோர் குறைவாகவும், நோய்த் தொற்று பரவி சிகிச்சை பெறுவோர் அதிகரித்தும் வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்திற்குள் வெளிமாநிலத்தவர் வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தலைக் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வருவோர் இதற்கு ஒத்துழைப்பதில்லை என்றும் வெளிமாநிலத்தவர் யார் புதுவைக்கு வந்தாலும் அரசுக்கோ காவல்துறைக்கோ தகவல் அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.


Also see:

மேலும் அவர் கூறுகையில், புதுச்சேரி பொதுமக்களும் சுயக் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கடைகளுக்குச் சென்று வந்தால் இந்த நோய்த்தொற்று குறையும். பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். மளிகைக் கடை, இறைச்சிக் கடை, மீன் கடைகளில் பொதுமக்களும் வியாபாரிகளும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதில்லை. நாளை பேரிடர் மீட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட உள்ளது என்றார்.அத்தோடு, அந்தக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகக் கூறிய முதலமைச்சர், மக்களைக் காப்பாற்ற சில கடுமையான நடவடிக்கைகளும் முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் தாங்களாகவே அரசைத் தொடர்புகொண்டு கடைகளின் நேரத்தைக் குறைத்து வருகின்றனர். ஆதலால் புதுச்சேரியில் கடை வைத்திருப்போரும் வியாபாரிகளும் பொதுமக்கள் நலன் கருதி கடைகளை மூட முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். குறிப்பாக கடலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து வருபவர்கள் புதுச்சேரிக்கு வருவதைத் தவிர்க்குமாறு கோரினார்.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading