தெலங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்கள் மற்றும் 28 போலீசாருக்கு கொரோனா - தமிழிசை சவுந்தரராஜனுக்கு தொற்று இல்லை..
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்கள் மற்றும் 28 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழிசை சவுந்தர ராஜனுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன்.
- News18 Tamil
- Last Updated: July 13, 2020, 11:57 AM IST
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய 10 ஊழியர்கள் மற்றும் 28 போலீசாருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் பணியாற்றி தொற்றுக்கு ஆளான 10 பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொரோனா இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளன.
Also see:
சிவப்பு மண்டலங்களில் உள்ளோரும், தொற்று உள்ளோரின் தொடர்பில் இருந்தோரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தமிழிசை சவுந்தர ராஜன் ட்விட்டரில் கூறியுள்ளார். பரிசோதனை செய்வதில் அலட்சியம் வேண்டாம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.