INTEREST RATES ON SMALL SAVINGS CUT ORDER WITHDRAWN VJR
சிறு சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் குறைப்பு உத்தரவை திரும்ப பெற்றது மத்திய அரசு
கோப்புப் படம்
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. பழைய வட்டி விகிதமே பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை, ஒன்று புள்ளி ஒரு சதவீதம் வரை குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுயிருந்தது. இதுதொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டு இருந்த அறிவி்ப்பில், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், பூஜ்யம் புள்ளி 7 சதவீதம் குறைக்கப்பட்டு, 6 புள்ளி 4 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான வட்டி விகிதம் பூஜ்யம் புள்ளி 9 விழுக்காடு குறைக்கப்பட்டு, 5.9 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம், 6.5 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக சேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமானது, 4 சதவீதத்தில் இருந்து மூன்று புள்ளி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம், அதிகபட்சமாக ஒன்று புள்ளி ஒரு சதவீதம் வரை குறைக்கப்பட்டு, 4.4 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரு ஆண்டுக்கான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமானது, 5 சதவீதமாகவும், மூன்று ஆண்டுக்கான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமானது 5 புள்ளி ஒரு சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுக்கான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் பூஜ்யம் புள்ளி 9 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதத்தை, 6.9 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதுதவிர கிசான் விகாஸ் பத்திரத்துக்கான ஆண்டு வட்டி விகிதம் 6 புள்ளி 2 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தது.
சிறுசேமிப்பு கணக்குகளான வட்டி விகிதம் குறைப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், அதிருப்தியும் எழுந்தது. இந்நிலையில் அந்த உத்தரவு திரும்ப பெறப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்த்தில் பதிவிட்டுள்ளார்.
Interest rates of small savings schemes of GoI shall continue to be at the rates which existed in the last quarter of 2020-2021, ie, rates that prevailed as of March 2021.
Orders issued by oversight shall be withdrawn. @FinMinIndia@PIB_India
நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. 2020 - 2021 கடைசி காலாண்டுக்கான வட்டி விகிதமே பின்பற்றப்படும் என்றும ்அறிவித்துள்ளார்.