Home » News » Business » GOLD RATE TODAY RS 36608 GOLD PRICE IN CHENNAI GOLD SILVER PRICE IN TAMIL NADU ON 27 NOVEMBER 2020 VIN

Gold Rate | சவரனுக்கு ₹296‌ குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ₹ 48 ரூபாய் உயர்ந்த‌ நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 296 குறைந்தது.

Gold Rate | சவரனுக்கு ₹296‌ குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை
  • News18
  • Last Updated: November 27, 2020, 10:48 AM IST
  • Share this:
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ₹4613 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 37 குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி  ₹36,904-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ₹ 296 குறைந்து ₹36,608-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ₹ 4576 விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 64.80 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.40 குறைந்து  ₹ 64.40 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த  வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதல் தொடர்ந்து இன்று ஐந்தாவது நாளாக விலை குறைந்துள்ளது.

Also read.. Lakshmi Vilas Bank | லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்..


இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ₹ 48 ரூபாய் உயர்ந்த‌ நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 296 குறைந்தது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்த நிலையில் இந்த வாரம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக‌ தங்கம் விலை குறைந்ததால் சவரன்  ₹36,608-க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கத்தில் விலை நான்காவது நாளாக குறைந்ததால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.
First published: November 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading