தங்கம் விலையானது திங்கள் முதல் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4226 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4162ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 64 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 33,296-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 512 உயர்ந்து ரூ. 33,808-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4226 விற்பனை செய்யப்படுகின்றது.
தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 67.60 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.90 விலை உயர்ந்து ரூ.68.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதல் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது.
Also read... கடன்களிலிருந்து வரியை சேமிக்க சில உதவிக்குறிப்புகள்...!
நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 96 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.512 விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்ததால் தங்கத்தின் விலை 34,000 குறைவாக விற்பனை செய்யப்பட்டது. தற்போது தங்கத்தின் விலை அதிகரித்திருந்தாலும் சவரன் ரூ.33,808-க்கு விற்பனையாகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.