தங்கம் விலையானது இரண்டாவது நாளாக இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4174 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4202ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 28 குறைந்துள்ளது.
அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 33,616-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 224 குறைந்து ரூ. 33,392-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4174 விற்பனை செய்யப்படுகின்றது.
தங்கத்தின் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று சரிந்து காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 68.70 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 1.40 விலை குறைந்து ரூ.67.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதல் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது.
Also read... அமேசானில் ஸ்மார்ட்போன்களை வாங்கும் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் 40% வரை தள்ளுபடி பெற ஒரு அரிய வாய்ப்பு..!
நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.224 விலை குறைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்ததால் தங்கத்தின் விலை 34,000 குறைவாக விற்பனை செய்யப்பட்டது. தற்போதும் தங்கத்தின் விலை குறைந்து சவரன் ரூ.33,392-க்கு விற்பனையாகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.