எலக்டிரிக் வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் ஸ்டேஷனை சீனாவில் முதன்முறையாக அமைத்துள்ள டெஸ்லா நிறுவனம், அதனை தங்களது சொந்த சோலார் நிறுவனத்தின் மூலம் நிறுவியுள்ளது.
உலகின் முன்னணி
எலக்டிரிக் கார்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா உள்ளது. சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எலக்டிரிக் கார்களுக்கு வரவேற்பை இருப்பதை முன்கூட்டியே கணித்த டெஸ்லா, அந்த நாடுகளில் சொந்தமாக எலக்டிரிக் கார் உற்பத்தி சாலையை தொடங்கி விற்பனையில் களைகட்டி வருகிறது. சீனாவில் எலக்டிரிக் கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கிய முதல் நிறுவனமும் டெஸ்லா. அந்த நாட்டில் ஏற்கனவே பல்வேறு எல்டிரிக் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கும் சூழலில் ஷாங்காய் நகரில் கார் தொழிற்சாலையை டெஸ்லா நிறுவியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உற்பத்தி மற்றும் விற்பனையிலும் சீனாவின் தயாரிப்பு நிறுவனங்களை விஞ்சும் அளவுக்கு டெஸ்லா சாதனை படைத்து வருகிறது. எலக்டிரிக் கார்களை வாங்குபவர்களுக்கு அந்த கார்களை சார்ஜிங் செய்வதற்கான ஸ்டேஷன் (பெட்ரோல் நிலையங்களைப் போல்) உள்ளிட்ட கட்டமைப்புகள் இல்லாததால், பலரும்
எலக்டிரிக் கார்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றன. அந்த குறையைப் போக்க சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டெஸ்லா நிறுவனம் சொந்தமாக சார்ஜிங் ஸ்டேஷனை நிறுவி வருகிறது. அந்தவகையில் சீனாவின் ஷாங்காய் நகரிலும் சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்துள்ளது.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், முழுக்க முழுக்க சோலார் கட்டமைப்பில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெஸ்லா நிறுவனம் சோலார் பிஸ்னஸில் இருப்பதால், அந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு சார்ஜிங் ஸ்டேஷனை உலகத்தரத்தில் அமைத்துள்ளது. சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை சேமித்து வைக்கும் தொழில்நுட்ப கருவிகளும் அந்த சார்ஜிங் ஸ்டேஷனில் உள்ளது. சீனாவைப் பொறுத்தவரையில் அடிப்படை கட்டமைப்புகளை பெருமளவில் டெஸ்லா விரிவாக்கம் செய்து வருகிறது.
Also read... IndiGo: தடுப்பூசி போட்டால் 10 சதவிகிதம் தள்ளுபடி - இண்டிகோ ஏர்லைன் நிறுவனம் அறிவிப்பு!
தொழில் போட்டிகள், அரசியல் பிரச்சனைகள் இருந்தாலும், அதனை லாவகமாக கையாண்டு வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளது. இந்தியாவிலும் டெஸ்லா எலக்டிரிக் கார் உற்பத்தி நிறுவனம் ஏற்கனவே கால் பதித்துள்ளது. இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களைக் குறிவைத்து எலக்டிரிக் கார் விற்பனையை டெஸ்லா தொடங்குகிறது. பெங்களுரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத்தில் அதன் கிளைகள் செயல்ட உள்ளன. பெங்களுருவில் தலைமையகமும், கார் தொழிற்சாலையும் நிறுவப்பட உள்ளது.
இதற்கு முன்னதாக மும்பையின் வோர்லி பகுதியில் டெஸ்லாவின் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. அந்த ஷோரூமில் இந்திய சந்தைக்கு ஏற்ற கார்களை முதலில் டெஸ்லா களமிறக்க உள்ளது. டெஸ்லா மாடல் 3 கார்களைக் கொண்டு விற்பனையை தொடங்க உள்ள டெஸ்லா, மாடல் ஒய் கார்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லாவின் மாடல் 3 கார்களைப் பொறுத்த வரை 3 வேரியண்டுகள் உள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால் 423 கி.மீ, 568 கி.மீ, 506 கி.மீ தொலைவு செல்லக்கூடியவையாக இருக்கும். இந்த கார்களின் குறைந்தபட்ச விலை 40 லட்சம் ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.