சமீபத்தில் மாருதி சுசுகி தனது ஈகோ ஆம்புலன்ஸ் விலையில் பெரிய மாற்றம் செய்துள்ளதாக அறிவித்தது. பம்பாய் பங்குச் சந்தையில் (BSE) ஒரு ஒழுங்குமுறை தாக்கல் மூலம் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டது மாருதி சுசுகி நிறுவனம். மத்திய நிதி அமைச்சகம் ஆம்புலன்ஸின் ஜிஎஸ்டி விகிதங்களை 28 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாக குறைத்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம் ஆகும். ஆம்புலன்ஸ் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாருதி சுசுகி ஈகோ ஆம்புலன்ஸின் (Maruti Suzuki Eeco Ambulance)புதிய விலை ரூ.6,16,875 ஆக இருக்கும். இது முந்தய விலையை விட சுமார் ரூ.88,000 குறைவாகும். மேலும் இந்த திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் செப்டம்பர் 30, 2021 வரை செல்லுபடியாகும்.
மாருதி சுசுகி ஈகோ ஆம்புலன்ஸின் மேற்காணும் ரூ.6,16,875 என்பது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை. நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஈகோ ஆம்புலன்சின் எக்ஸ் ஷோரூம் விலையில் குறைப்பு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விலைகுறைப்பு நடவடிக்கை ஜூன் 14 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், எனவே ஜூன் 14 முதல் மாருதி ஈகோ ஆம்புலன்ஸை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை குறைப்பு நடவடிக்கை பொருந்தும் என்றும் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த அதிரடி விலை மாற்றம் ஜூன் 14 முதல் மாருதி நிறுவனம் விற்பனையாளர்களுக்கு வழங்கிய இன்வாய்ஸ்ட் (invoiced) வாகனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கு டீலர்ஷிப்களால் இன்வாய்ஸ்டு(invoiced) செய்யப்பட்ட வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் மாருதி சுசுகி குறிப்பிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை கடந்த ஜூன் 14 அன்று ஹேண்ட் சானிடைசர், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், BiPAP மெஷின்ஸ், டெஸ்டிங் கிட்ஸ், ஆம்புலன்ஸ்கள் மற்றும் வெப்பநிலை சோதனை உபகரணங்கள் போன்ற கோவிட் நெருக்கடியை கையாள உதவும் 18 பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த வரி குறைப்பு தொற்று நெருக்கடி நேரத்தில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மீதானது என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்தே நாட்டில் மலிவு விலை
ஆம்புலன்ஸ்களின் விலை மேலும் குறைந்துள்ளது. மாருதி சுசுகியின் Eeco ஆம்புலன்ஸ் பற்றி பேசும்போது, மாருதி ஈகோ ஆம்புலன்ஸ் 3,675 மிமீ நீளம், 1,475 மிமீ அகலம், 1,905 மிமீ உயரம், மற்றும் 2,350 மிமீ வீல் பேஸ் கொண்டது. மேலும் இது 1.2 லிட்டர் 4-பாட் கேசலின் என்ஜின் (four-pot gasoline engine) மூலம் இயக்கடுகிறது.
Also read... Electric Vehicle: தெலங்கானாவில் எலக்டிரிக் கார் உற்பத்தி - ரூ. 2100 கோடி டிரிட்டன் நிறுவனம் முதலீடு!
இது 75 பிஹெச்பி பீக் பவரையும், 98 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. டிரான்ஸ்மிஷன் செயல்பாடுகளை 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கையாளுகிறது. இந்த ஆம்புலன்ஸ் 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் அதிகபட்சமாக 130 கிமீ வேகத்தில் செல்ல கூடியது. மேலும் லிட்டருக்கு 15.1 கி.மீ மைலேஜ் வழங்குவதாக ARAI சான்றளிக்கப்பட்டுள்ளது. இது முன் மற்றும் பின்புற எமெர்ஜென்சி டெக்கல்ஸ், டாஷ்போர்டு மற்றும் சைரனுக்கான அம்பர் கலர்டு விளக்குகள், பின்புற பெட்டியில் ஒரு ரப்பர் மேட், ஸ்பீக்கர் மற்றும் மைக், முதலுதவி கிட், ஆக்சிஜன் சிலிண்டர் கிளாம்ப், ப்ரி அசம்பிள்டு மோனோபிளாக் ஸ்ட்ரெச்சர் போன்ற பல ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு தேவையான அம்சங்களையும் கொண்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.