Eid Mubarak 2021 | கோவையில் ரம்ஜான் பண்டிகை வீடுகளிலேயே எளிமையாக கொண்டாட்டம்

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவையில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே, ரம்ஜான் பண்டிகையை எளிமையாக கொண்டாடடினர்.

    ரமடம்ர் இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான், பக்ரீத் முக்கிய பண்டிகைகளாக கொண்டாடப்படுகிறது. இதில், ஆண்டின் மற்ற மாதங்களைக் விட, ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே சிறந்த மாதமாக இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். இந்த மாதம் இறைவனை நெருங்கவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் கருதுகின்றனர்.

    இதையொட்டி, ஒரு மாதம் நோன்பு இருந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், கோவையில் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான ஜாக் கமிட்டி சார்பில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக, காலையிலேயே அவரவர் தங்களது வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர். சிலர், வீட்டின் மொட்டை மாடிகளிலும் தனிமனித இடைவெளியை பின்பற்றி, குடும்பத்தினருடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    மேலும் படிக்க... Corona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்

     

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Published by:Vaijayanthi S
    First published:May 13, 2021, 13:21 IST