west-bengalASSEMBLY ELECTIONS 2021

1/292 SEATS (146 SEATS TO WIN)

Alliance TMCBJPLEFT+OTH
Wins
+
Leads
2157511
+/- 2015

1/292 SEATS

(147 SEATS TO WIN)

tamil-naduASSEMBLY ELECTIONS 2021

0/234 SEATS (117 SEATS TO WIN)

Alliance DMK+AIADMK+MNM+AMMK+OTH
Wins
+
Leads
15876000
+/- 2015

0/234 SEATS

(118 SEATS TO WIN)

keralaASSEMBLY ELECTIONS 2021

0/140 SEATS (70 SEATS TO WIN)

Alliance LDFUDFBJP+OTH
Wins
+
Leads
994100
+/- 2015

0/140 SEATS

(71 SEATS TO WIN)

assamASSEMBLY ELECTIONS 2021

1/126 SEATS (63 SEATS TO WIN)

Alliance BJP+INC+OTH
Wins
+
Leads
75501
+/- 2015

1/126 SEATS

(64 SEATS TO WIN)

puducherryASSEMBLY ELECTIONS 2021

5/30 SEATS (15 SEATS TO WIN)

Alliance BJP+INC+OTH
Wins
+
Leads
1595
+/- 2015

5/30 SEATS

(16 SEATS TO WIN)

‘அந்தப் பையனுக்கு பயம் இல்லை!’ - சேவாக்கை ஆச்சரியப்படுத்திய சேத்தன் சர்காரியா

ஒரு பந்துவீச்சாளராக உங்களது பந்து பவுண்டரிக்கு அடிக்கப்படுவதை குறித்து ஒருபோதும் பயப்படக்கூடாது

    ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சேத்தன் சர்காரியாவின் பந்துவீச்சு வீரேந்திர சேவாக்கை கவர்ந்துள்ளது. இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்கள் ஜாகீர் கான், ஆஷிஸ் நெஹ்ரா போன்று பயமின்றி பந்துவீசுவதாக சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

    நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்தப்போட்டியில் குஜராத்தை சேர்ந்த சேத்தன் சர்காரியா அறிமுகமானார். பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்களாக கிறிஸ்கெய்ல், கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஆகியோர் சரவெடியாக வெடித்தனர். பவர் ப்ளே ஓவராகட்டும் கடைசி ஓவராகட்டும் சர்காரியா கச்சிதமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தார். 4 ஓவர்கள் வீசிய சர்காரிய 31 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ’

    சேத்தன் சர்காரியாவின் இந்த ஆட்டம் சேவாக்கை மிகவும் கவர்ந்துள்ளது. இதுகுறித்து பேசிய சேவாக், “ இவரது பெயரை இதற்கு முன்பாக கேட்டிருக்கிறேன். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இவரது பந்துவீச்சை பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் இந்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் வேறு விதமான பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் வேறு விதமான பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். இங்கு பெரிய மற்றும் புகழ்மிக்க பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். அவரது மனநிலையை பார்க்கவேண்டுமே. அவர் அச்சமின்றி இருந்தார்.

    ஒரு பந்துவீச்சாளராக உங்களது பந்து பவுண்டரிக்கு அடிக்கப்படுவதை குறித்து ஒருபோதும் பயப்படக்கூடாது என ஜாகீர் கானும், நெஹ்ராவும் கூறுவார்கள். நீங்கள் அடிப்படாதவரை உங்களால் கற்றுக்கொள்ளவும் முடியாது விக்கெட்டுகளை எடுக்கவும் முடியாது. நேற்று சர்காரியா அந்த மாதிரியான மனநிலையைத்தான் வெளிப்படுத்தினார் என்று நான் நினைக்கிறேன்.

    அவரது பந்துவீச்சில் நிறைய மாறுபாடுகள் இருந்தன. ஒரு சில நோபால்களை வீசினாலும் ஒட்டுமொத்தமாக சிறப்பாக பந்து வீசினார். மய்ங்க் அகர்வாலை அவுட்டாக்கிய விதம், கிறிஸ் கெய்லுக்கு வீசிய ஒரு பந்தில் ஆச்சரியப்படுத்தினார். அவர் என்னை இம்பிரஸ் செய்துவிட்டார்” என சேவாக் கூறியுள்ளார்.

    Published by:Ramprasath H
    First published:April 13, 2021, 13:47 IST