west-bengalASSEMBLY ELECTIONS 2021

2/292 SEATS (146 SEATS TO WIN)

Alliance TMCBJPLEFT+OTH
Wins
+
Leads
2048422
+/- 2015

2/292 SEATS

(147 SEATS TO WIN)

tamil-naduASSEMBLY ELECTIONS 2021

0/234 SEATS (117 SEATS TO WIN)

Alliance DMK+AIADMK+MNM+AMMK+OTH
Wins
+
Leads
14291100
+/- 2015

0/234 SEATS

(118 SEATS TO WIN)

keralaASSEMBLY ELECTIONS 2021

0/140 SEATS (70 SEATS TO WIN)

Alliance LDFUDFBJP+OTH
Wins
+
Leads
944420
+/- 2015

0/140 SEATS

(71 SEATS TO WIN)

assamASSEMBLY ELECTIONS 2021

3/126 SEATS (63 SEATS TO WIN)

Alliance BJP+INC+OTH
Wins
+
Leads
76473
+/- 2015

3/126 SEATS

(64 SEATS TO WIN)

puducherryASSEMBLY ELECTIONS 2021

0/30 SEATS (15 SEATS TO WIN)

Alliance BJP+INC+OTH
Wins
+
Leads
840
+/- 2015

0/30 SEATS

(16 SEATS TO WIN)

DCvsRR | கடைசி ஓவர்களில் சிக்சர்களை பறக்கவிட்ட கிறிஸ் மோரிஸ்... ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர்களில் கிறிஸ் மோரிஸின் அதிரடியான ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் 2021 தொடரின் 7-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரீத்திவ் ஷா, ஷிகார் தவன் களமிறங்கினார்கள். சி.எஸ்.கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இருவரும் இன்றையப் போட்டியில் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர். டெல்லி அணியில் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் கேப்டன் ரிஷப் பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடி 51 ரன்கள் சேர்த்தார்.

    டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் உனட்கட் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

    ராஜஸ்தான் அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. டேவிட் மில்லர் மட்டும் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் கொடுத்தார். கடைசி ஓவர்களில் கிறிஸ் மோரிஸ் அதிரடி காட்ட போட்டியில் மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டது.

    ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி அணி சார்பில் கடைசி ஓவரை டாம் குர்ரன் வீசினார். மோரிஸ் எதிர் கொண்ட முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் சிக்ஸர் விளாசி அசத்தினார். இதனால் 4 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 3-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் 4-வது பந்தில் சிக்ஸர் அடித்து அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

    Published by:Vijay R
    First published:April 15, 2021, 23:17 IST