west-bengalASSEMBLY ELECTIONS 2021

3/292 SEATS (146 SEATS TO WIN)

Alliance TMCBJPLEFT+OTH
Wins
+
Leads
2038423
+/- 2015

3/292 SEATS

(147 SEATS TO WIN)

tamil-naduASSEMBLY ELECTIONS 2021

0/234 SEATS (117 SEATS TO WIN)

Alliance DMK+AIADMK+MNM+AMMK+OTH
Wins
+
Leads
14390100
+/- 2015

0/234 SEATS

(118 SEATS TO WIN)

keralaASSEMBLY ELECTIONS 2021

0/140 SEATS (70 SEATS TO WIN)

Alliance LDFUDFBJP+OTH
Wins
+
Leads
944420
+/- 2015

0/140 SEATS

(71 SEATS TO WIN)

assamASSEMBLY ELECTIONS 2021

3/126 SEATS (63 SEATS TO WIN)

Alliance BJP+INC+OTH
Wins
+
Leads
76473
+/- 2015

3/126 SEATS

(64 SEATS TO WIN)

puducherryASSEMBLY ELECTIONS 2021

0/30 SEATS (15 SEATS TO WIN)

Alliance BJP+INC+OTH
Wins
+
Leads
840
+/- 2015

0/30 SEATS

(16 SEATS TO WIN)

தீபக் சஹர் ஒன் மேன் ஷோ.. ஜடேஜா அட்டகாசமான ஃபீல்டிங்.. - 106 ரன்களில் சுருண்ட பஞ்சாப் கிங்ஸ்

தீபக் சஹர் இன்றையப் போட்டியில் முதல் ஓவரின் 4வது பந்திலே மயங்க் அகர்வாலை க்ளீன் போல்ட் செய்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸை கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஓப்பன் செய்தனர்.

    தீபக் சஹர் முதல் ஓவரை வீசினார். பவர்ப்ளேவில் விக்கெட்டுகளை வீழ்த்தும் தீபக் சஹார் கடந்தப்போட்டியில் விக்கெட்டே எடுக்கவில்லை. ஆனால் இன்றையப் போட்டியில் முதல் ஓவரின் 4வது பந்திலே மயங்க் அகர்வாலை க்ளீன் போல்ட் செய்தார். இதனையடுத்து கிறிஸ் கெய்ல் களம் புகுந்தார். முதல் ஓவரின் கடைசி பந்தில் கிறிஸ் கெய்ல் கொடுத்த பந்துவீச்சை  ருதுராஜ் கெய்க்வாட் வீணடித்தார்.

    தீபக் சஹர் வீசிய இரண்டாவது ஓவரில் கெய்ல் ஒரு சிங்கிள் எடுக்க முயன்றார் கே.எல்.ராகுல் கீறிஸை ரீச் செய்வதற்கு முன்பு ஜடேஜா ரன் அவுட் செய்தார். ராகுல் 5 ரன்களில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதனையடுத்து கடந்தப்போட்டியில் அதிரடியாக ஆடிய தீபக் ஹூடா களமிறங்கினார். தீபக் சஹரின் மூன்றாவது ஓவரின் 2-வது பந்தில் கிறிஸ் கெய்ல் சிக்கினார். தீபக் வீசிய ஸ்லோ பந்தை ட்ரைவ் செய்ய முற்பட்டு ஜடேஜா வசம் சிக்கினார் கெய்ல். 10 ரன்களில் வெளியேறினார் கெய்ல். இதனையடுத்து நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார்.

    தீபக் சஹர் ஷாட்டாக வீசிய பந்தை தூக்கியடிக்க முயன்று தாக்கூரிடம் கேட்ச் கொடுத்தார். 2 பந்துகளை சந்தித்த பூரன் ரன் எதுவும் இல்லாமல் வெளியேறினார். பஞ்சாப் அணி 4.4 ஓவரில் 19 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் தீபக் ஹூடா பவுண்டரி விளாசினார். பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் 6 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பு 26 ரன்கள் எடுத்தது. தீபக் தனது 4-வது ஓவரை வீசினார். 2-வது பந்தை மிட் ஆஃப் திசையில் தீபக் ஹூடா அடிக்க முற்பட்டு டுப்ளிசிஸ் வசம் சிக்கினார். 10 ரன்களில் தீபக் ஹூடா வெளியேறினார். 4 ஓவரை வீசிய தீபக் சஹர் 1 மெய்டனுடன் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதனையடுத்து தமிழக வீரர் ஷாருக்கான், ரிச்சர்ட்சன் இருவரும் கொஞ்சம் ஃபார்ட்னர் ஷிப் பில்ட் செய்தனர். இந்தக் கூட்டணியை சுழற்பந்துவீச்சாளர் மொயீன் அலி உடைத்தார். ரிச்சர்ட்சன் மொயீன் அலி பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். 15 ரன்களில் வரும் நடையைக் கட்டினார். இதனையடுத்து தமிழக வீரர் ஷாருக்கான் மற்றும் முருகன் அஷ்வின் இருவரும் கூட்டணி அமைத்தனர்.

    பஞ்சாப் அணியை தோளில் தூக்கி சுமந்தார் ஷாருக்கான். தனி ஒருவனாக சென்னை பந்துவீச்சை சமாளித்தார். முருகன் அஷ்வின் பிராவோ பந்துவீச்சில் கேட்சாகி வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஷாருக்கான் 20-வது ஓவரின் முதல் பந்தில் தூக்கியடித்து ஜடேஜா வசம் சிக்கினார். அவர் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 47 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.

    Published by:Ramprasath H
    First published:April 16, 2021, 21:03 IST