west-bengalASSEMBLY ELECTIONS 2021

1/292 SEATS (146 SEATS TO WIN)

Alliance TMCBJPLEFT+OTH
Wins
+
Leads
2157511
+/- 2015

1/292 SEATS

(147 SEATS TO WIN)

tamil-naduASSEMBLY ELECTIONS 2021

0/234 SEATS (117 SEATS TO WIN)

Alliance DMK+AIADMK+MNM+AMMK+OTH
Wins
+
Leads
15876000
+/- 2015

0/234 SEATS

(118 SEATS TO WIN)

keralaASSEMBLY ELECTIONS 2021

0/140 SEATS (70 SEATS TO WIN)

Alliance LDFUDFBJP+OTH
Wins
+
Leads
994100
+/- 2015

0/140 SEATS

(71 SEATS TO WIN)

assamASSEMBLY ELECTIONS 2021

1/126 SEATS (63 SEATS TO WIN)

Alliance BJP+INC+OTH
Wins
+
Leads
75501
+/- 2015

1/126 SEATS

(64 SEATS TO WIN)

puducherryASSEMBLY ELECTIONS 2021

5/30 SEATS (15 SEATS TO WIN)

Alliance BJP+INC+OTH
Wins
+
Leads
1595
+/- 2015

5/30 SEATS

(16 SEATS TO WIN)

ஐ.பி.எல் 2021 தொடரிலிருந்து விலகிய பென்ஸ்டோக்ஸ் - காரணம் என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக பென்ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

    ஐ.பி.எல் 14-வது சீசன் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தமுறை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றாலும் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டைப் போல பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றுள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது, ஒரு பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது அவருக்கு இடது கையில் அடிபட்டது. அதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது இடது கையிஃல எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

    அதனையடுத்து, ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் பென் ஸ்டோக்ஸ் அணியிலிருந்து விலகியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியின் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல உதவினார். ஏற்கெனவே, ராஜஸ்தான் அணியின் முக்கிய வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் காயம் காரணமாக விலகியுள்ளார்.

    பென் ஸ்டோக்ஸ் குறித்த ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பதிவில், ‘கடந்த போட்டியில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தொடரிலிருந்து விலகுகிறார். அவர், தொடர்ந்து ராஜஸ்தானுடன் இணைந்து இருப்பார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Published by:Karthick S
    First published:April 14, 2021, 10:18 IST