கடந்த 6 ஆண்டுகளாக தனது சொந்த செலவில் மாவட்டம் முழுவதும் சுமார் 1,700 மரக்கன்றுகள் நட்டு தினசரி பராமரித்து பாதுகாத்து வருகிறார் அரசு மருத்துமனை ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர். மேலும், ஆட்டோ மூலமாக பொதுமக்கள
கடந்த 6 ஆண்டுகளாக தனது சொந்த செலவில் மாவட்டம் முழுவதும் சுமார் 1,700 மரக்கன்றுகள் நட்டு தினசரி பராமரித்து பாதுகாத்து வருகிறார் அரசு மருத்துமனை ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர். மேலும், ஆட்டோ மூலமாக பொதுமக்களுக்கு மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதுடன் மலிவு விலையில் மரக்கன்றுகளை கொடுத்து மரம் வளர்ப்பை ஊக்குவித்து வருகிறார். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
மலிவு விலையில் மரக்கன்று விநியோகம்
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு மருத்துவமனையில் 35 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் டிரைவராக 50 வயதான பெருமாள்சாமி பணியாற்றி வருகிறார். இவர் தனது ஊதியத்தில் ஒரு பகுதியை ஒதிக்கி, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மாநில, தேசிய நெடுஞ்சாலை ஒரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறார்.
விடுமுறை நாட்களில் சமூக சேவை
மேலும், பணி ஓய்வு மற்றும் விடுமுறை நாட்களில் 'மரம் வளர்ப்போம்' என பொதுமக்களுக்கு மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆட்டோவில் மேற்கொள்வதுடன் மலிவு விலையில் மரக்கன்றுகளை கொடுத்து மரம் வளர்ப்பை ஊக்குவித்து வருகிறார். இதுவரை 8,000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளார். சாலையில் சுற்றி தெரியும் ஆதரவற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு தினசரி 3 வேளை உணவு வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி குப்பை கூளமாக காட்சியளிக்கும் அரசு பேருந்து நிலையங்கள், பயணிகள் நிழற்கூடத்தினை தூய்மைப்படுத்தும் பணியிலும் அவ்வபோது ஈடுபட்டு வருகிறார்.
அ.மணிகண்டன் -விருதுநகர்- செய்தியாளர்