உடலில் ஏற்படும் விஷக்கடியை போக்க விநோத சடங்கு முறையை பின்பற்றி வாழ்ந்து வரும் கிராம மக்கள் குறித்த செய்தி தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
விஷக்கடியை போக்கும் விஷக்கல் விநோத சடங்கு
உடலில் ஏற்படும் விஷக்கடியை போக்க விநோத சடங்கு முறையை பின்பற்றி வாழ்ந்து வரும் கிராம மக்கள் குறித்த செய்தி தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
விஷக்கடியை போக்கும் விஷக்கல் விநோத சடங்கு
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அருகே பெரியதும்ப குண்டு என்ற கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சித்தர் ஒருவர் விஷக்கடிக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். அவர் காலமாகிவிட்ட பின் அவரது நினைவாக சத்துணவு கூடத்தின் பின்புறத்தில் பெரிய கல் தூண் நடப்பட்டது. அதனை விஷக்கல் கோயில் என்று கிராம மக்கள் அழைக்கின்றனர்.
ஊர் மக்கள் நம்பிக்கை
இதுகுறித்து பேசிய சிவபெருமாள் கூறியதாவது, விஷக்கடி கல் கேரளாவில் இருந்து வந்தது. இங்கு வாழ்ந்த சித்தர் ஒருவரின் நினைவாக ஊரின் மையப்பகுதியில் கல் நிறுவப்பட்டது. இந்த கல்லை விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் 3 முறை சுற்றி வழிபாடு நடத்தி, எந்த பகுதியில் விஷக்கடி ஏற்பட்டுள்ளதோ? அப்பகுதியினை கல் மீது தேய்க்க வேண்டும். இதே போல் 3 நாட்கள் 3 முறை செய்து வந்தால் விஷக்கடி உடனே சரியாகும். நேர்த்திக்கடனாக தேங்காய் உடைக்கப்படுகிறது. மேலும், இக்கோயிலுக்கு வெளியூரில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். விஷக்கடி ஊர் என்றால் இந்த ஜில்லா முழுக்க தெரியும் என்றும் கூறினார்.
அ.மணிகண்டன் -செய்தியாளர்-விருதுநகர்.