முழு ஊரடங்கு அமல்படுத்திய நிலையில், ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் சாலையோர கடை வைத்து வியாபாரம் செய்யும் சிறு குறு தொழிலாளர்கள் ஊரடங்கால் கதறுகின்றனர்.
புதிய பேருந்து நிலையத்தில் ந
முழு ஊரடங்கு அமல்படுத்திய நிலையில், ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் சாலையோர கடை வைத்து வியாபாரம் செய்யும் சிறு குறு தொழிலாளர்கள் ஊரடங்கால் கதறுகின்றனர்.
புதிய பேருந்து நிலையத்தில் நுங்கு வியாபாரம் செய்யும் பெண் கூறிகையில் "எங்களுக்கும் 2 பிள்ளைக இருக்குதுங்க. நாங்க இந்த நடைப்பாதையில வியாபாரம் பண்ணாதான் அன்னன்னைக்கு பிள்ளைங்களுக்கு போய் சோறு போட முடியும். ஆம்பளைக இல்லாதவங்க என்ன செய்வோம். உழைக்கறதுக்கு எங்க போவோம். அன்னன்னைக்கு பிளாட்பாரத்துல இருந்தாதான் எங்களுக்கு சாப்பாடு. வெயிலுக்குள்ள இருந்தாதான் எங்களுக்கு சாப்பாடு. உழைச்சு கொடுக்க ஆம்பளைக இல்ல. இத விட்டு வேற வழியும் இல்ல. வேற பொழப்ப பார்க்க போகவும் முடியாது. 12 மணிக்குள்ள சரக்க எடுக்கணும். வாங்கிப்போட்ட பொருள் எல்லாம் வீணாதான் போகுது. என்ன செய்ய முடியும். எங்க தலையெழுத்து அப்படி கிடக்குறோம். 4 மணி வரனா எங்களுக்கும் கொஞ்சம் பொழப்பு ஓடும். 12 மணி வரைங்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு" என்கிறார்.
கிழங்கு, நுங்கு, வெள்ளரிக்காய் வியாபாரம் செய்யும் வயதான பாட்டி நம்மிடம் கூறுகையில், "எம்.ஜி.ஆர் சிலை கட்டுனதுல இருந்து நாங்க இந்த இடத்துலையே தான் வியாபாரம் பார்க்குறோம். கிழங்கு, நுங்கு, வெள்ளரிக்காய்ன்னு விற்பேன். வேற எந்த வியாபாரமும் பார்க்கமாட்டேன். எனக்கு இப்ப வயசு 70 ஆச்சு. இதலாம் அள்ளிட்டு போங்க அள்ளிட்டு போங்கன்னா எங்க அள்ளிட்டு போவேன். இதவிட்டா, எனக்கு வேற புழப்பு இல்ல. இந்த இடத்த விட்டு எங்க போவேன்?" என்று கேள்வி எழுப்புகிறார்.
செருப்பு தைக்கும் தொழிலாளி நம்மிடம் கூறிகையில், “ எதோ 5 ரூபா, 10 ரூபா கிடைச்சா செருப்பு தச்சு கொடுக்குறோம். வீட்டு செலவுக்கு நாலு காசு வேணும்ல. நாங்க தினமும் இந்த ஊசிய வச்சு செருப்ப தச்சாத்தான் எங்க புழப்பு ஓடும். செருப்பா இருந்தாலும் நாங்க சுத்தமாத் தானே செய்யுறோம். எப்படியிருந்தாலும் மாஸ்க் போட்டு சுத்தமாக தான் நாங்க இருக்கிறோம். அன்னன்னைக்கு பொழப்ப நடத்துறவங்க நாங்க. எதாவது நியாமா எங்களுக்கு செய்யுங்க” என்றார்.
சாலையோர வியாபார பெண்மணி நம்மிடம், "யாரும் எதுவும் பண்ண முடியாது. முதல்ல டாஸ்மாக் அடைச்சாத்தான் மக்கள் எல்லாம் நிம்மதியா இருக்க முடியும். அரசாங்க சம்பளம் வாங்குறவங்க வேணும்னா நிரந்தரமா பொழைக்கலாம்.
அன்னன்னைக்கு வியாபாரம் பார்க்கற அப்பாவி மக்கள்ளாம் இந்த ஊரடங்குல கஷ்டம்தான் படணும். முக்காவாசி பேர் குடிச்சிட்டு குடியத்தான் கெடுக்குறாகளே தவிர குடும்பத்த யாரும் பார்க்கமாட்டறாங்க. டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கறதால எத்தனை குடும்பங்கள் எவ்வளவோ கஷ்டப்படுது. கொரோனால சாவுறத விட, ஊரடங்கு போடுறதாலா எத்தனையோ பேர் பசியால சாகுறாங்க. இருக்கப்பட்டவங்க வேணும்னா சாப்படலாம். ஆனா, அன்னன்னைக்கு உழைச்சி சாப்பிடுற குடும்பங்கள் எத்தனையோ இருக்கு. 100- ல 50% அரசாங்க சம்பளம் வாங்குனா, 50% வறுமைல வாடுறவங்க இருக்காங்க" என்று வேதனையை வெளிப்படுத்துகிறார்.