இதுகுறித்து நம்மிடம் பேசிய குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் கே.ஆர். பாபு, ‘கோவிட்- 19 முதல் அலையில் இருந்த தாக்கத்தை விட தற்போது 2021 மாறுபட்டிருக்கிறது. குழந்தைகளை அதிகம் பாதிக்கிறார்கள். குழந்த
இதுகுறித்து நம்மிடம் பேசிய குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் கே.ஆர். பாபு, ‘கோவிட்- 19 முதல் அலையில் இருந்த தாக்கத்தை விட தற்போது 2021 மாறுபட்டிருக்கிறது. குழந்தைகளை அதிகம் பாதிக்கிறார்கள். குழந்தைகளை அதிகம் பாதிக்க முக்கிய காரணம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே.
இப்போது, ஏற்படுகின்ற தொற்றுகளில் இருமல், காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, சளி போன்ற அறிகுறிகள் கோவிட்டாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதனால், பெற்றோர்கள் அனைத்தையும் கோவிட் என நினைத்து பயப்பட தேவையில்லை.
கொரோனா தொற்றாக இருந்தாலுமே குழந்தைகளுக்கு எளிதாக அதனை சரி செய்ய கூடிய அனைத்து விதமான மருத்துவ வழிமுறைகளும் உபகரணங்களும் இருக்கின்றன. அதனால், கோவிட் தொற்று ஏற்பட்டாலும் பெற்றோர்கள் பதட்டப்படாமல் அதனை அணுக வேண்டும். சாதாரணமாக, அனைத்து தொற்றுகளும் கோவிட் மாதிரியே வருகிறது. உடனே பயந்து கோவிட் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை’ என்று தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு கோவிட் தொற்று உறுதியானால் அதை பெற்றோர்கள் எவ்வாறு கையாள வேண்டும்? என்று நாம் கேட்டபோது, ‘குழந்தைகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுவிட்டால், அதனை சில பிரிவுகளாக பிரிக்கலாம். அவை நோ சிம்டம்ஸ், மைல்டு, மாடுரேட், சிவியர் உள்ளிட்டவை.
இந்த குழந்தைகளை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, அவர்களுக்கு உதவியாக அவர்களின் அம்மா அல்லது கேர் டேக்கர்ஸ் உடன் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருந்தே சிகிச்சை அளித்து பார்த்துக்கொள்ளலாம். இதில், மிக முக்கியமானது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள். புரோட்டீன் சத்து அதிகம் நிறைந்த உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பழங்கள் மற்றும் பழச்சாறுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த, கபசுர குடிநீர் போன்றவற்றிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற தன்மை இருப்பதாக கூறுகிறார்கள். அதனால், சொல்லக்கூடிய அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த கோவிட் தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். கூட்டம் கூடக் கூடிய இடங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதனால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகிறது.
வீட்டில் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம். கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால், இந்த கோவிட் தாக்கத்தில் இருந்து அவர்களை பாதுகாத்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் கோவிட் தொற்றை மிகக் கவனமாக கையாள வேண்டும். ஏனெனில், இது குழந்தைகளை நேரடியாக தாக்குவதில்லை. பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் மூலம்தான் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளுக்கு தொற்று அறிகுறிகள் சீக்கிரம் தென்படுவதில்லை. அதனால், பலருக்கும் பரவ வாய்ப்பு அதிகமுள்ளது. இதனால், வெளியில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம்:
மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். இதன் மூலம் 90% நாம் பாதுகாப்பு பெறலாம். மாஸ்க் முக்கிய இடத்தில் இருக்கிறது. அதனால், நாம் அணியும் மாஸ்க், மெல்லிய துணியாக இருந்தால் கூட 30% பாதிப்பை கட்டுப்படுத்தும். அதுபோக, குறைந்தப்பட்சம் காட்டன் மாஸ்க், 3 லேயர் சர்ஜிகல் மாஸ்க் பயன்படுத்தலாம். N-95 மாஸ்க் பெரும்பாலும் களஆய்வு பணியாளர்கள், தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருப்பவர்கள், காவல் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்” என்றார் ஆலோசனையாக.