நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூரில் பிரசித்தி பெற்ற விஜயகிரி பழனியாண்டவர் எனும் முருகன் கோயில் உள்ளது. இப்பகுதியில், விவசாய தொழில் நடந்து வருவதால் மயில்கள் அதிகளவில் காணப்படுகின்ற
நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூரில் பிரசித்தி பெற்ற விஜயகிரி பழனியாண்டவர் எனும் முருகன் கோயில் உள்ளது. இப்பகுதியில், விவசாய தொழில் நடந்து வருவதால் மயில்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
இந்நிலையில், அப்பகுதியிலுள்ள அம்மையப்பன் தோட்டம் என்ற பகுதியில் இரையை தேட வரும் மயில்கள் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மயில்களிடம் இருந்து பயிரை பாதுகாக்க தோட்டத்தின் உரிமையாளர் அம்மையப்பன் விவசாய நிலத்தில் குருணை மருந்துடன் கலந்த அரிசியை தூவியுள்ளார். இரை தேடி கூட்டமாக வந்த 6 ஆண் மற்றும் 3 பெண் மயில்கள் அந்த விஷம் கலந்த அரிசியை உண்டதால் மயங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், அப்பகுதியை சேர்ந்த மலையம்மாள் என்பவரின் 10 க்கும் மேற்பட்ட கோழிகள் மற்றும் சதீஷ்குமார் என்பவரின் 4 சேவல்களும் விஷம் கலந்த அரிசியை உண்டு உயிரிழந்தன.
தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் கணேசன், இறந்து போன மயில்களை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ள பகுதியில் கொத்து கொத்தாக மயில்கள், கோழிகள் கொல்லப்பட்டது. அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.