நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 59 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர், மாவட்டத்தில் இதுவரை 13,737 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 59 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர், மாவட்டத்தில் இதுவரை 13,737 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல்: கொல்லிமலை நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல தடை!
நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாதலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. மூலிகைகள் நிறைந்து காணப்படுவதால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக மலைப்பகுதியில் தடுப்பு நடவடிக்கையாக, சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுஇ
மேலும், கொல்லிமலையில் முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ள 300 அடி உயரத்தில் அமைந்துள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த, தடையானது மறு உத்தரவு வரும்வரை நீடிக்கும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது. வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் வழியும் நீர்வீழ்ச்சிகளை காண வந்த சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.