கொரோனா கட்டுபாட்டு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கார் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் முகக் கவசம் அணியா
கொரோனா கட்டுபாட்டு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கார் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் முகக் கவசம் அணியாமல் பயணம் செய்வதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் மெகராஜ் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே வருவாய், சுகாதாரம் மற்றும் நகராட்சித் துறை அதிகாரிகளுடன் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது, அவ்வழியாக வந்த பேருந்துகளில் ஏறி ஆய்வு செய்து பேருந்தில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தும் அவர்களுக்கு முக கவசங்களையும் வழங்கினார். கார்களை ஆய்வு செய்தபோது பலரும் முகக் கவசம் அணியாமல் சென்ற நிலையில் அவர்களுக்கு அபராதம் விதித்தும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.