நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. ராசிபுரம், மெட்டாலா, ஆயில்பட்டி, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. ராசிபுரம், மெட்டாலா, ஆயில்பட்டி, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விவசாயப் பொருட்களை ராசிபுரம் உழவர் சந்தையில் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் ராசிபுரம் உழவர் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக நேற்று அறிவித்தது.
“வேறு இடத்திற்கு மாற்றுவதால் பொதுமக்கள் நீண்ட தூரம் வந்து பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படும். மேலும், விவசாய பொருட்கள் வீணாகிவிடும்” எனக்கூறிய விவசாயிகள், உழவர் சந்தை தற்போது இருக்கும் இடத்திலேயே முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் வியாபாரம் செய்து வருவதாகவும் தங்களுக்கு மீண்டும் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அரசு அனுமதிக்குமாறும் கூறி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உழவர் சந்தையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.