Thalapathy 65: ஜார்ஜியாவில் படமாக்கப்பட்ட தளபதி 65 சண்டைக்காட்சி!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜார்ஜியாவில் விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த அட்டவணையில் முக்கியமான சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளனர்.

Thalapathy 65: ஜார்ஜியாவில் படமாக்கப்பட்ட தளபதி 65 சண்டைக்காட்சி!

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜார்ஜியாவில் விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த அட்டவணையில் முக்கியமான சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளனர்.

    மாஸ்டரின் பிரமாண்ட வெற்றிக்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில், விஜய் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் சில வாரங்கள் முன்பு தொடங்கியது. திட்டமிட்டபடி எந்தப் பிரச்சனையும் இன்றி படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் சில தினங்களில் படக்குழு சென்னை திரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன.

    ஜார்ஜியா ஷெட்யூல்டில் முக்கியமான சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளனர். விஜய் உள்ளூர் ரவுடிகளுடன் மோதுவது போன்று இந்தக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சண்டைக் கலைஞர்களை, இந்தக் காட்சியில் பயன்படுத்தியுள்ளனர். மேலும் சில முக்கியமான காட்சிகளையும் இயக்குநர் நெல்சன் படமாக்கியுள்ளார். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இவரின் இரண்டாவது படம் டாக்டர், வெளிவரும் முன்பே விஜய்யை இயக்கும் வாய்ப்பை நெல்சன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல், காமெடி அனைத்தும் கலந்த கமர்ஷியலாக உருவாகி வருகிறது.

    இன்னும் பெயரிடப்படாத தளபதி 65 படத்தில், பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். மிஷ்கினின் முகமூடி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Published by:Shalini C
    First published:April 22, 2021, 14:55 IST