Ishwarya Bhaskar: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம்!

நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரின் திருமணம் இன்று சென்னையில் நடந்துள்ளது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

Ishwarya Bhaskar: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம்!

    நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரின் திருமணம் இன்று சென்னையில் நடந்துள்ளது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    மூத்த தமிழ் நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா, இன்று காலை தொழிலதிபர் அகுல் என்பவரை மணந்தார். இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதியரை ஆசீர்வதித்தனர். முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கோலிவுட் நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, அருண் விஜய், பரத், பிரசன்னா, சினேகா, கவின், சரத்குமார், கருணாஸ், கிரேஸ், டி.ராஜேந்தர், மனோபாலா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    ஐஸ்வர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட், அவரது குரல் இளைய தலைமுறை நடிகைகளான ரகுல் ப்ரீத் சிங், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோருக்கு படங்களில் குரல் கொடுத்துள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு அகுல் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், அவர்களது திருமணம் 2020-ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தாமதமானது.

    ஏறக்குறைய இரண்டு வருடங்கள் காத்திருந்தபின், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் மணமகனின் குடும்பத்தினர் முறையான வழிகாட்டுதல்களுடன் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இது இரு வீட்டாருக்கும் இனிமையான ஒன்றாக மாறியது.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Published by:Shalini C
    First published:April 22, 2021, 17:23 IST