Udhayanidhi Stalin: மகன் இன்பநிதியுடன் உதயநிதி - கவனம் பெறும் புகைப்படம்!

நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தனது மகன் இன்பநிதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இப்படம் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது.

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் வழி பேரனும், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து, நடிகரானார். தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்ட்டிக்கிள் 15 ரீமேக் ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு திமுக-வின் இளைஞரணி செயலாளரான உதய், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் கண்டிருக்கிறார்.

    உதயநிதியின் மனைவி கிருத்திகா தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த பெண் இயக்குநர்களுள் ஒருவர். வணக்கம் சென்னை, காளி ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் தற்போது மகன் இன்பநிதின் தோளில் சக நண்பரைப் போல் கை போட்டு தான் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் உதயநிதி. வெகுநாட்களாக இன்பாவின் புகைப்படம் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Published by:Shalini C
    First published:April 22, 2021, 19:14 IST