
- News18 Tamil
- Last Updated: March 28, 2021, 12:35 IST
ஏப்ரல் மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.
பல்வேறு வங்கி விடுமுறைகள் காரணமாக இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகள், 2021 ஏப்ரல் மாதத்தில் 9 நாட்கள் மூடப்படும். விடுமுறைகள் தவிர, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படுவது ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது. எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்தால், ஏப்ரல் 2021-ல் மொத்தம் 15 நாட்கள் வங்கிகள் செயல்படாது.
ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வலைத்தளத்தின்படி, ஏப்ரல் 2021-ல் ராம நவமி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு போன்ற பல பண்டிகை தினங்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த தினங்களில் வங்கிகள் செயல்படாது?
ஏப்ரல் 1 - வங்கிகள் தங்கள் ஆண்டு கணக்குகளை முடிப்பதற்காக
ஏப்ரல் 2 - புனித வெள்ளி
5 ஏப்ரல் - பாபு ஜெகஜீவன் ராமின் பிறந்த நாள்
ஏப்ரல் 6 - தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021
13 ஏப்ரல் - தெலுங்கு புத்தாண்டு தினம் / உகாதி
14 ஏப்ரல்- டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / தமிழ் புத்தாண்டு தினம் / விஷு
ஏப்ரல் 15 - பெங்காலி புத்தாண்டு
ஏப்ரல் 16 - போஹாக் பிஹு
ஏப்ரல் 21 - ஸ்ரீ ராம நவமி
ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்படுவது வழக்கத்தில் உள்ளன.
4 ஏப்ரல் - ஞாயிறு
10 ஏப்ரல் - இரண்டாவது சனி
11 ஏப்ரல் - ஞாயிறு
18 ஏப்ரல் - ஞாயிறு
24 ஏப்ரல் - நான்காவது சனி
25 ஏப்ரல் - ஞாயிறு
மேற்கூறிய விடுமுறை தினங்களில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப சில தினங்கள் மாறலாம். இந்த விடுமுறை தினங்களை மனதில் வைத்து, வாடிக்கையாளர்கள் தங்கள் வருகையைத் திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நாட்களில் வங்கி கிளைகள் ம்ட்டும் தான் மூடப்பட்டிருக்கும், மொபைல் மற்றும் இணைய வங்கி வழக்கம் போல் செயல்படும். அதனால் வாடிக்கையாளர்கள் எவ்வித தடையுமின்றி ஆன்லைன் முறைகள் மூலம் பரிவர்த்தனை செய்யலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்